ரஷ்யாவை உதறிவிட்டு, பணத்தை அச்சிட ஜேர்மனி, அமீரகம் பக்கம் திரும்பிய நாடு!
பல வருடங்களாக ரஷ்யாவில் பணத்தை அச்சிட்டு வந்த நாடொன்று, ஜேர்மனி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
13 ஆண்டுகளாக ரஷ்யாவில் பணம் அச்சிட்டு வந்த சிரியா, தற்போது ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் ஜேர்மனியுடன் புதிய ஒப்பந்தங்கள் செய்து பணத்தை அச்சிட திட்டமிட்டுள்ளது.
இது, சிரியாவின் சர்வதேச உறவுகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றத்தைக் காட்டுகிறது.
சிரியா மத்திய வங்கி கவர்னர் மற்றும் நிதி அமைச்சர் இருவரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள Oumolat என்ற பண அச்சகத்தை சமீபத்தில் பார்வையிட்டுள்ளனர். இதனால் UAE-யுடன் ஒப்பந்தம் நடைபெறும் நிலைமையில் இருக்கிறது.
இதற்கிடையில் ஜேர்மனியின் Bundesdruckerei மற்றும் Giesecke+Devrient என்ற நிறுவனங்கள் ஆர்வம் காட்டியுள்ளன. இருப்பினும், அதிகாரப்பூர்வ ஒப்பந்தம் குறித்து எந்தத் தகவலும் தெரியவில்லை.
புதிய பணத்தாள்களில் பஷார் அல் அசாத் படத்தை நீக்கும் திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது பராமரிக்கப்பட்டுவரும் ஊதா நிற பணத்தாளில் அவரது படம் உள்ளது.
இந்த பணம் அச்சிடும் மாற்றம், ஐக்கிய அரபு அமீரகத்துடன், 800 மில்லியன் டொலர் மதிப்பிலான தார்தூஸ் துறைமுக ஒப்பந்தம், மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் சில நிதி தடைகள் நீக்கம், அமெரிக்காவின் சில பொருளாதார தடைகள் தளர்த்தல் ஆகியவற்றுடன் நேரடி தொடர்பு கொண்டுள்ளது.
சிரியா உள்நாட்டில் பண பற்றாக்குறை மற்றும் கருப்புச் சந்தையில் அமெரிக்க டொலருக்கு எதிராக பவுண்ட் விகிதம் கடந்த வாரம் 10,000-க்கு மேல் இருந்தது. இதை சீராக கட்டுப்படுத்தும் நோக்கில் பணச்சுழற்சியை சீரமைக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Syria currency news 2025, Syria new banknotes, Oumolat UAE Syria deal, Bashar al-Assad currency removed, Syria Germany money printing, Syria economy update, Syrian pound exchange rate, Tartus UAE deal, Syria sanctions lifted 2025, Syria financial reforms