சிரியா ஜனாதிபதியின் ஜேர்மன் பயணம் ஒத்திவைப்பு: பின்னணி
சிரியாவின் புதிய ஜனாதிபதி ஜேர்மனிக்கு அரசுமுறைப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த நிலையில், தனது திட்டத்தை அவர் ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிரியா ஜனாதிபதியின் ஜேர்மன் பயணம் ஒத்திவைப்பு
சிரியாவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அஹ்மத் அல் ஷரா, இன்று ஜேர்மனிக்கு அரசு முறைப்பயணம் மேற்கொள்வதாக இருந்தது.

நாளை அவர் ஜேர்மன் சேன்சலரான பிரெட்ரிக் மெர்ஸ் மற்றும் பல அமைச்சர்களை சந்திக்க திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் தனது ஜேர்மன் பயணத்தை ஒத்திவைத்துள்ளதாக ஜேர்மன் அரசின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் நிலவும் அரசியல் சூழல் காரணமாக சிரியா ஜனாதிபதியின் ஜேர்மன் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சிரியாவில் கிட்டத்தட்ட 14 ஆண்டுகால உள்நாட்டுப் போருக்குப் பிறகு அகதிகளை திருப்பி அனுப்புவது மற்றும் சிரியாவை மீண்டும் கட்டியெழுப்புவது தொடர்பில் ஜேர்மனியும் சிரியாவும் பேச்சுவார்த்தைகள் நடத்தக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
ஆனால், சிரியாவில் சில முக்கிய அரசியல் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளன. ஆம், வார இறுதியில் நடந்த கடுமையான மோதலுக்குப் பிறகு, ஞாயிற்றுக்கிழமை, குர்திஷ் தலைமையிலான ஆயுதக் குழுவான சிரிய ஜனநாயகப் படைகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் சிரியா அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |