பொதுமக்களை கொத்தாக கொன்று குவித்த ஜனாதிபதி... அவர் கல்லறைக்கு கிளர்ச்சியாளர்களின் பதில்
சிரியாவின் மிகக் கொடூர சர்வாதிகாரியாக அறியப்படும் முன்னாள் ஜனாதிபதி ஹபீஸ் அல்-அசாதின் கல்லறைக்கு கிளர்ச்சியாளர்கள் நெருப்பு வைத்துள்ளனர்.
எரிக்கப்பட்ட கல்லறை
அசாத் குடும்பத்தினரின் பிறந்த நகரமான கர்தாஹாவில் அமைந்துள்ள கல்லறைக்கே கிளர்ச்சியாளர்கள் தீ வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மட்டுமின்றி, பொதுமக்களும் கிளர்ச்சியாளர்களும் அந்த சம்பவத்தைக் கொண்டாடியுள்ளதும் காணொளியாக வெளியாகியுள்ளது.
பின்னர் எரியும் சவப்பெட்டி கல்லறையிலிருந்து தெருவுக்கு இழுக்கப்பட்டது. அசாத் குடும்பத்தின் கொடூர ஆட்சியின் எச்சங்களை களையும் பொருட்டு எரிக்கப்பட்ட கல்லறையில் கிளர்ச்சியாளர்கள் கொடியை உயர்த்தினர்.
1971ல் கிளர்ச்சியால் சிரியாவின் ஆட்சியை கைப்பற்றிய ஹபீஸ் அல்-அசாத், அதன் பின்னர் நீண்ட 50 ஆண்டுகளாக தங்கள் குடும்பத்தினரே ஆட்சியமைக்கும் வகையில் நடவடிக்கை எடுத்தார்.
2000 ஆண்டு அவர் இறக்கும் போது சிரியாவின் ஆட்சி பஷர் அசாதின் கைக்கு வந்தது. ஹபீஸின் மிகக் கொடூர நடவடிக்கையாக 1982ல் ஹமா நகரில் நடந்த படுகொலைகளை குறிப்பிடுகின்றனர்.
மிகவும் மோசமான சம்பவம்
ஹமா நகரை மொத்தமாக சுற்றிவளைத்த இராணுவம், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களில் 40,000 பேர்களை கொத்தாக கொன்று குவித்தது. குண்டு வீச்சு, டாங்கிகளால் தாக்குதல், இராசன ஆயுதங்களைப் பயன்படுத்துதல் என ஹபீஸ் இராணுவம் வெறியாட்டம் நடத்தியுள்ளது.
மொத்தமாக மூன்று வாரம் ஹபீஸ் இராணுவத்தின் பிடியில் சிக்கி ஹமா நகர மக்கள் சித்திரவதை அனுபவித்துள்ளனர். நவீன மத்திய கிழக்கில் இதுவரை நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் மோசமான சம்பவம் இதுவென்று நம்பப்படுகிறது.
2000 ஆண்டு, ஒரு தொலைபேசி உரையாடலின் போது மாரடைப்பு காரணமாக ஹபீஸ் மரணமடைந்தார். அவருக்கு அடுத்து சிரியாவின் ஆட்சியை அவரது மகன் பஷர் அசாத் முன்னெடுத்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |