ஐரோப்பிய நாட்டை உலுக்கிய தாக்குதல்: இளைஞரை தடுக்க முயன்ற புலம்பெயர் சாரதி..தொடரும் கொலை மிரட்டல்கள்
ஆஸ்திரியாவில் கத்திக்குத்து தாக்குதலை தடுக்க முயன்ற உணவு விநியோக சாரதிக்கு, கொலை மிரட்டல்கள் அனுப்படுவதால் அச்சத்தில் உள்ளார்.
கத்திக்குத்து தாக்குதல்
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த வாரம், 23 வயது அகமது ஜி என்று அழைக்கப்படும் இளைஞர் கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டார்.
இதில் பயங்கர தாக்குதலுக்கு உள்ளான 14 வயது சிறுவன் உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர். வில்லச் நகரில் இச்சம்பவம் அரங்கேறியது.
அந்நாட்டை உலுக்கிய சம்பவமாக இது கருதப்பட்ட நிலையில், உள்துறை அமைச்சர் கெர்ஹார்ட் கார்னர் இச்சம்பவத்தை 'இஸ்லாமியத் தாக்குதல்' என்று குறிப்பிட்டார்.
ஆனால், குறித்த இளைஞர் தாக்குதலில் ஈடுபட்டபோது உணவு விநியோக சாரதி துணிச்சலுடன் செயல்பட்டு தடுத்து நிறுத்தினார்.
கொலை மிரட்டல்கள்
இதன் காரணமாக ஹீரோவாக அவர் பாராட்டுகளைப் பெற்றார் அல்லதீன் அல்ஹலாபி என்ற அந்நபர். ஆனால், சிரிய நாட்டைச் சேர்ந்த அல்ஹலாபி தற்போது தனது செயலுக்காக ஒன்லைனில் கொலை மிரட்டல்களை சந்தித்து வருகிறார்.
மனைவி மற்றும் 3 பிள்ளைகளுக்கு தந்தையான அவர் உயிர் பயத்தில் இருப்பதாக சக ஊழியர் ஒருவர் ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.
மேலும், 'உனது மரணத்தை நீயே கருதிகொள்' மற்றும் 'கடவுள் உங்களை சபிப்பார்' போன்ற குறுந்தகவல் அவருக்கு அனுப்பப்பட்டதையும் அவர் வெளிப்படுத்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |