ஐரோப்பிய நாடொன்றில் வழிப்போக்கர்கள் மீது தாக்குதல் நடத்திய புகலிடக்கோரிக்கையாளர்
ஆஸ்திரியாவின் வில்லாச் நகரின் மையத்தில் சிரிய புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் வழிப்போக்கர்கள் பலரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக மிக அரிதென்றே
குறித்த தாக்குதல் சம்பவத்தில் 14 வயதுடைய சிறுவன் கொல்லப்பட்டதுடன், நால்வர் காயங்களுடன் தப்பியுள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட அந்த 23 வயது சிரிய புகலிடக் கோரிக்கையாளர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாக்குதலுக்கு இலக்கானவர்கள் அந்த இளைஞருக்கு அறிமுகமானவர்களா என்பது தொடர்பில் தகவல் ஏதும் வெளியாகவில்லை. காயமடைந்தவர்கள் 14 முதல் 32 வயதுடையவர்கள் என்றே பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் ஆஸ்திரியா நாட்டில் மிக மிக அரிதென்றே கூறப்படுகிறது. கடந்த 2020 ல் வியன்னாவில் ஒரு இஸ்லாமிய அடிப்படைவாதி நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் நான்கு பேர் கொல்லப்பட்டனர், இச்சம்பவமானது பல தசாப்தங்களுக்கு பின்னர் ஆஸ்திரியாவில் நடக்கும் மிகக் கொடூரமான தாக்குதல் என்றே கூறப்பட்டது.
நடவடிக்கை தேவை
கடந்த 20 ஆண்டுகளில் இதுபோன்றதொரு சம்பவம் நாட்டில் எங்கும் பதிவாகவில்லை என்றே பத்திர்கையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சிரிய உணவு விநியோக சாரதி என்று ஆஸ்திரிய ஊடகங்களால் அடையாளம் காணப்பட்ட ஒருவர், தாக்குதல் நடத்திய இளைஞர் மீது தனது காரை ஏற்றி, மேலும் பலருக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுத்தார் என்றே கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் முதலிடம் பிடித்த தீவிர வலதுசாரி கட்சியான Freedom Party தங்களால் கூட்டணி ஆட்சி அமைக்க முடியாமல் போனது என வெள்ளிக்கிழமை ஜனாதிபதியிடம் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியான நிலையிலேயே, புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தாக்குதலில் ஈடுபட்ட செய்தி வெளியாகியுள்ளது.
தற்போது இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து புகலிடம் கோருபவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கை தேவை என்றும் வில்லாச் நகரில் நடந்து போன்ற ஒரு சம்பவத்தை இனி ஏறுக்கொள்ள முடியாது என்றும் அறிக்கை ஒன்றில் Freedom Party தலைவர் Herbert Kickl குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |