சிரியாவில் உள்நாட்டு போருக்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல்
சிரியாவில், பஷார் அல்-அசாத் ஜனாதிபதி பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின், முதல் முறையாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது.
கடந்த 13 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு போருக்குப் பிறகு, இந்த தேர்தல் ஒரு முக்கியமான மாற்றத்தை குறிக்கிறது.
இடைக்கால ஜனாதிபதி அகமத் அல்-ஷரா தலைமையில் நடைபெறும் இந்த தேர்தலில், மக்கள் நேரடியாக வாக்களிக்க முடியாது.
210 இடங்களில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களுக்கான பிரதிநிதிகளை தேர்தல் கல்லூரிகள் தேர்ந்தெடுக்கும். மீதமுள்ள 70 உறுப்பினர்களை இடைக்கால ஜனாதிபதி அகமத் அல்-ஷரா நியமிப்பார்.
இருப்பினும், ராக்கா, ஹசக்கே மற்றும் சுவெய்தா ஆகிய மாகாணங்களில் பாதுகாப்பு காரணங்களால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதில் ரக்கா மற்றும் ஹசக்கே பகுதிகள் பெரும்பாலும் குர்து-முன்னணியால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. சுவெய்தாவில் Druze மற்றும் Sunni பழங்குடியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
தேர்தலில் 1500-க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். ஆனால், முன்னாள் ஆட்சி ஆதரவாளர்கள், வெளிநாட்டு தலையீட்டை நாடுபவர்கள் ஆகியோர் போட்டியிடுவதிலிருந்து விலக்கப்பட்டுள்ளனர்.
பெண்கள் குறைந்தபட்சம் 20 சதவீதம் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களாக இருக்க வேண்டும், ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான பாலின மற்றும் இன ஒதுக்கீடுகள் இல்லை.
இடைக்கால ஜனாதிபதி நேரடியாக 70 உறுப்பினர்களை நியமிப்பது மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்காது என சமூக அமைப்பிகள் கவலை தெரிவித்துள்ளன.
ஆனால், "மக்கள் ஆவணங்களை இழந்துள்ளனர், பாதி மக்கள் நாட்டிற்கு வெளியே உள்ளனர்" என இந்த தேர்தல் முறையை அகமத் அல்-ஷரா நியாயப்படுத்துகிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |