தமிழக வீரர் நடராஜனுக்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் வாழ்த்துக்கள்: எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
அவுஸ்திரேலிய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் தமிழக வீரர் தங்கராஜ் நடராஜனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு மூன்று வித தொடர்களில் விளையாடி வருகிறது.
இதில் ஒரு நாள் தொடரை அவுஸ்திரேலியாவும், டி20 தொடரை இந்தியாவும் வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கிடையே நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதலிரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றிகளுடன் சமநிலையில் உள்ளன. இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வரும் 7-ஆம் திகதி நடைபெறவுள்ளது.
NEWS: T Natarajan to replace Umesh Yadav in India’s Test squad. #TeamIndia #AUSvIND
— BCCI (@BCCI) January 1, 2021
Details ? https://t.co/JeZLOQaER3 pic.twitter.com/G9oXK5MQUE