ஆப்கானிஸ்தானை விழுங்கிய அபிஷேக் சர்மா புயல்: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
T20 2026: India beats Afghanistan by 7 Wickets: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இலக்கை நிர்ணயித்த ஆப்கானிஸ்தான்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி, இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணியை எதிர்கொண்டது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
INNINGS CHANGE! 🔁
— Afghanistan Cricket Board (@ACBofficials) September 13, 2026
Azmatullah Omarzai (64*) played a gem of a knock and was well supported by Mohammad Nabi (33) as #AfghanAtalan posted 156/8 runs on the board in the first innings. 👏
Over to our bowling unit now to take the proceedings forward! 👍#AfghanAtalan | #AFGvIND |… pic.twitter.com/QKXXfpOURn
இதனால் முதல் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 156 ஓட்டங்கள் குவித்தது.
ஆப்கானிஸ்தான் அணியில் அஸ்மத்துல்லா உமர்சாய் 64 ஓட்டங்களையும், முகமது நபி 33 ஓட்டங்களையும் அதிகபட்சமாக குவித்து அசத்தினர்.
அபார வெற்றி பெற்ற இந்தியா
வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 10 ஓட்டங்களில் விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினார்.

இருப்பினும் அதிரடியை குறைக்காத அபிஷேக் சர்மா 32 பந்துகளில் 7 பவுண்டரிகள், 7 சிக்சர்கள் விளாசி 82 ஓட்டங்கள் குவித்தார்.
அவருக்கு ஜோடியாக இஷான் கிஷான் 33 பந்துகளில் 42 ஓட்டங்கள் குவித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இதன் மூலம் வெறும் 13.4 ஓவர்களிலேயே இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 157 ஓட்டங்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |