கடைசி ஓவரில் மிரட்டிவிட்ட இந்தியா! 2 ஓட்டங்களில் திரில் வெற்றி
இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்தியாவின் தொடக்கம்
தொடக்க வீரர் இஷான் கிஷன் முதல் ஓவரில் 1 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 16 ஓட்டங்கள் சேர்த்தார். அறிமுக போட்டியில் களமிறங்கிய சுப்மான் கில் 7 ஓட்டங்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சூர்யகமார் யாதவ் 7 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இதே போன்று சஞ்சு சாம்சன் 5 ஓட்டங்களில் ஆட்டழிந்தார். இதனால் இந்திய அணி 46 ஓட்டங்களை சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது.
இதனையடுத்து, அதிரடியாக விளையாட முயன்ற இஷான் கிஷன் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஹர்திக் பாண்டியா முக்கிய கட்டத்தில் 29 ஓட்டங்களில் வெளியேறினார்.
இறுதியில், 23 பந்துகளை மட்டுமே எதிர்கொண்ட தீபக் ஹூடா 41 ஓட்டங்கள் விளாசினார். இதில் ஒரு பவுண்டரிகளும், 4 சிக்சரும் அடங்கும். மறுமுணையில் அக்சர் பட்டேல் 20 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுக்க, இந்திய அணி 20 ஓவர் முடிவில் 162 ஓட்டங்கள் எடுத்தது.
மும்பை மைதானம்
மும்பை ஆடுகளம் ஓட்டங்களை குவிக்க சாதகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது. ஆனால், பந்து பேட்டிற்கு சரியாக வரவில்லை. மேலும் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக பந்து செயல்பட்டது. இதனால் இந்திய அணி 200 ஓட்டங்களுக்கு மேல் அடிக்க வேண்டும் என்று நினைத்து அதிரடியாக விளையாடி முக்கிய கட்டத்தில் விக்கெட்டுகளை இழந்தது.
இலங்கை அணி
163 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற விளையாடிய இலங்கை அணி முக்கிய கட்டத்தில் ஆட்டமிழந்தது.
ஐபிஎல் வீரர் ராஜபக்ச 10 ஒட்டாங்க்ளில் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறியது. அப்போது ஹசரங்கா 21 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அபாரமாக விளையாடிய ஷனாகா 27 பந்துகளில் 45 ஓட்டங்கள் சேர்த்தார். இதில் 3 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் அடங்கும். ஷனாகா முக்கிய கட்டத்தில் ஆட்டமிழக்க, கடைசி 2 ஓவரில் 29 ஒட்டாங்க்ல வெற்றிக்கு தேவைப்பட்டது.
த்ரில்லான கடைசி ஓவர்
கடைசியில் 19-வது ஓவரில் நோ பால், சிக்சர் என ஓட்டங்கள் செல்ல, கடைசி ஓவரில் இலங்கை வெற்றிக்கு 13 ஓட்டங்கள் தேவைப்பட்டன. இதில் அக்சர் பட்டேல் வீசிய 3வது பந்தில் கருணரத்னே சிக்சர் அடிக்க, ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. கடைசி பந்தில் வெற்றிக்கு 4 ஓட்டங்கள் தேவைப்பட, கருணரத்னாவால் பவுண்டரி அடிக்க முடியவில்லை. இதன் காரணமாக 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியா திரில் வெற்றி பெற்றது.