இந்திய இசையின் அடையாளம் சாகிர் ஹுசைன் மறைவு: அவரது வாழ்க்கை பயணம், சொத்து மதிப்பு
இந்தியாவின் தபேலா(Tabla Maestro) வித்துவான் சாகிர் ஹுசைன் ஞாயிற்றுக்கிழமையான நேற்று தன்னுடைய 73வது வயதில் காலமானார்.
தபேலா வித்துவான் சாகிர் ஹுசைன் மறைவு
இந்திய இசையின் உலகளாவிய அடையாளங்களில் ஒருவரான புகழ்பெற்ற தபேலா இசைக் கலைஞர் சாகிர் ஹுசைன்(Zakir Hussain) ஞாயிற்றுக்கிழமை 73 வயதில் காலமானார்.
இதயம் தொடர்பான பிரச்சனைகள் காரணமாக அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
#RIP Ustad Zakir Hussain dies at 73
— Film History Pics (@FilmHistoryPic) December 15, 2024
Perhaps the last of the legends whose name is synonymous with a musical instrument. End of an era. pic.twitter.com/D6JFMStYRq
மேலும் அவர் ரத்த அழுத்த பிரச்சனைகளால் அவதிப்பட்டு வந்ததாகவும் அவரது மேலாளர் நிர்மலா பச்சானி தெரிவித்தார்.
சாகிர் ஹுசைன் வாழ்க்கை பயணம்
1951 மார்ச் 9ம் திகதி இந்தியாவின் மும்பையில் பிறந்த சாகிர் ஹுசைன், திறமையான தாள வாத்திய இசைக் கலைஞர் உஸ்தாத் அல்லா ரக்காவின் மூத்த மகனாவார்.
இசையில் ஆழ்ந்த ஈடுபாடுடன் வளர்ந்த அவர் தந்தையின் வழிகாட்டுதலின் கீழ் தனது திறமைகளை வளர்த்துக் கொண்டார்.
மும்பை மாகிம் புனித மைக்கேல் உயர்நிலைப் பள்ளியில் தனது தொடக்கக் கல்வியை முடித்த அவர் பின்னர் புனித சவியர் கல்லூரியில் பட்டம் பெற்றார்.
தபலா வாத்தியத்தில் ஹுசைனின் திறமை அவருக்கு சர்வதேச அங்கீகாரத்தையும் உலகம் முழுவதும் அர்ப்பணிப்புள்ள ரசிகர்களையும் பெற்றுத் தந்தது.
இந்திய பாரம்பரிய இசையை ஜாஸ், ராக் மற்றும் உலக இசை வகைகளுடன் இணைக்கும் அவரது புதுமையான அணுகுமுறையால் அவர் புகழ் பெற்றார்.
ஜான் மெக்லாக்ளின், ஜார்ஜ் ஹாரிசன் மற்றும் மிக்கி ஹார்ட் உள்ளிட்ட பல்வேறு இசை மரபுகளை சேர்ந்த புகழ்பெற்ற இசைக் கலைஞர்களுடன் அவர் இணைந்து பணியாற்றியது உலகளாவிய இசை தூதராக அவரது அந்தஸ்தை மேலும் உறுதிப்படுத்தியது.
அவரது இசை சாதனைகளைத் தவிர, ஹுசைன் நடிப்பிலும் ஈடுபட்டார், "சாஸ்", "ஹீட் அண்ட் தஸ்ட்" மற்றும் சமீபத்தில் "மாங்கி மேன்" (2024) போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சாகிர் ஹுசைன் மற்றும் கதக் நடனக் கலைஞரும் ஆசிரியருமான அவரது அண்டோனியா மின்னிகோலா-வுக்கு அனிசா குரேஷி மற்றும் இசபெல்லா குரேஷி என்று இரண்டு மகள்கள் உள்ளனர்.
சாகிர் ஹுசைன் சொத்து மதிப்பு
சாகிர் ஹூசைன் தன்னுடைய இசை புலமை மற்றும் நடிப்பு திறன் ஆகியவற்றின் மூலம் ஏராளமான செல்வத்தை சம்பாதித்துள்ளார்.
அறிக்கைகளின் படி அவர் 1 மில்லியன் அமெரிக்க டொலர் அல்லது ரூ.84809500 சொத்து மதிப்பு கொண்டு இருக்க வேண்டும் என தெரியவந்துள்ளது.
அவர் தன்னுடைய கச்சேரிகளுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கட்டணமாக வசூலித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |