169 பந்துகளில் 52 ஓட்டங்கள் எடுத்த ஜாம்பவானின் மகன்
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்திய தீவுகள் 167 ஓட்டங்களுக்கு சுருண்டது.
முதல் டெஸ்ட்
கிறிஸ்ட்சர்சில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது. 
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 231 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக கேன் வில்லியம்சன் 52 ஓட்டங்களும், பிரேஸ்வெல் 47 ஓட்டங்களும் எடுத்தனர்.
பின்னர் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி 10 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. எனினும் தொடக்க வீரரான தகெனரின் சந்தர்பால் (ஷிவ்நரைன் சந்தர்பாலின் மகன்) நங்கூர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 
தகெனரின் சந்தர்பால்
மறுமுனையில் அரைசதம் அடித்த ஷாய் ஹோப் (Shai Hope) 56 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய சேஸ், கிரேவ்ஸ் இருவரும் டக்அவுட் ஆகி வெளியேறினர்.
ஆனால், தகெனரின் சந்தர்பால் (Tagenarine Chanderpaul) நிலைத்து நின்று ஆடி நியூசிலாந்திற்கு நெருக்கடி கொடுத்தார். மொத்தம் 169 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 பவுண்டரிகளுடன் 52 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழக்க, மேற்கிந்திய தீவுகள் 167 ஓட்டங்களுக்கு சுருண்டது. ஜேக்கப் டுஃபி 5 விக்கெட்டுகளும், மேட் ஹென்றி 3 விக்கெட்டுகளும், பௌக்ஸ் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
64 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்க்சை தொடங்கிய நியூசிலாந்து, 2ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 32 ஓட்டங்கள் எடுத்துள்ளது. 
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |