முதல் சதமே இரட்டை சதம்! சாதித்து காட்டிய இந்திய வம்சாவளி ஜாம்பாவனின் மகன்..குவியும் பாராட்டு
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் தேஜ்நரைன் சந்தர்ப்பால் இரட்டை சதம் விளாசினார்.
முதல் டெஸ்ட் போட்டி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி புலவாயோவில் நடந்து வருகிறது.
முதல் இன்னிங்சை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்புக்கு 447 ஓட்டங்கள் குவித்து டிக்ளேர் செய்தது. தொடக்க வீரர்களான பிராத்வெயிட், தேஜ்நரைன் சந்தர்ப்பால் 336 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
ஜாம்பவானின் மகன்
கேப்டன் பிராத்வெயிட் 182 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்த நிலையில், தேஜ்நரைன் சந்தர்ப்பால் இரட்டை சதம் விளாசினார். இது அவரது முதல் இரட்டை சதம் ஆகும்.
@windiescricket(Twitter)
மேலும் இது அவரது முதல் சர்வதேச சதமும் கூட. இதன்மூலம் முதல் சதத்தையே இரட்டை சதமாக அடித்த 10வது மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
தேஜ்நரைன் சந்தர்ப்பால் இந்திய வம்சாவளி ஜாம்பவான் வீரர் ஷிவ்நரைன் சந்தர்ப்பாலின் மகன் ஆவார். பல சாதனைகளை படைத்த ஷிவ்நரைனின் மகன் இரட்டை சதம் மூலம் தனது சாதனையை தொடங்கியிருப்பதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Tagenarine steps out and whacks it straight to make his maiden Test ton a double! He also goes past his father's best in Test cricket (203*)
— ESPNcricinfo (@ESPNcricinfo) February 6, 2023
It's been an innings of class ?♂️#ZIMvWI
மொத்தம் 467 பந்துகளை எதிர்கொண்ட தேஜ்நரைன் சந்தர்ப்பால், 3 சிக்ஸர் மற்றும் 16 பவுண்டரிகளுடன் 207 ஓட்டங்கள் எடுத்து நாட்அவுட் ஆக இருந்தார். மேற்கிந்திய தீவுகளின் இன்னிங்சிற்கு பிறகு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 114 ஓட்டங்கள் எடுத்துள்ளது.