அதிகரிக்கும் சீனாவின் அத்துமீறல்: 2027-க்குள் போருக்கு தயாராகும் தைவான்
சீனாவுடன் ஏற்பட்டு வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு தைவான் தன்னுடைய இராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது.
பலப்படுத்தப்படும் தைவான் ராணுவம்
தீவு நாடான தைவானை சீனா தன்னுடைய சொந்த பிரதேசமாக அறிவித்து தொடர் அச்சுறுத்தல்களை தைவானுக்கு ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் தீவிரமடையும் சீனாவின் அச்சுறுத்தல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, தைவான் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் தன்னை போர் நடவடிக்கைகளுக்கு தயார்படுத்தி வருகிறது.
தைவான் ஜனாதிபதி லை சிங்-தே அறிவித்த தகவலில், 2027ம் ஆண்டுக்குள் போருக்கான தயார் நிலையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

இது தொடர்பாக புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஜனாதிபதி லை சிங்-தே, சுயாட்சி நடத்தி வரும் தைவானை தன்னுடைய சொந்த பிரதேசமாக சித்தரிக்கும் சீனாவின் போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார்.
இந்த அறிவிப்பு, தைவான் தற்காப்பு படை திறனை அதிகரிக்கும் நோக்கில் சுமார் $40 பில்லியன் மதிப்பில் சிறப்பு பாதுகாப்பு வரவு செலவுத் திட்டம் வெளியானதை தொடர்ந்து வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |