இந்தியர்களுக்கு visa-on-arrival திட்டத்தை அமுல்படுத்தவுள்ள கிழக்காசிய நாடு
இந்திய சுற்றுலாப் பயணிகளை அதிகம் ஈர்ப்பதற்காக தைவான் அரசு புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
இந்தியர்களுக்கு visa-on-arrival திட்டத்தை தைவான் (Taiwan) அமுல்படுத்த உள்ளது.
இந்த நடவடிக்கை இந்தியாவில் இருந்து சுற்றுலா மற்றும் வணிக பயணத்தை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தைவானின் துணை வெளியுறவு அமைச்சர் Chung-kwang Tien இதனை அறிவித்துள்ளார்.
தைவானில் 3000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் படித்து வருகின்றனர். சுற்றுலா, வணிகம் மற்றும் கல்வி நோக்கங்களுக்காக இந்தியர்கள் தைவான் செல்வதை இந்த விசா -ஆன்-அரைவல் திட்டம் எளிதாக்கும்.
தற்போது, இந்தியர்கள் தைவான் செல்வதற்கு முன் விசா பெற வேண்டும். ஆனால் விசா-ஆன்-அரைவல் கொள்கை அதிக இந்திய சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பது மட்டுமல்லாமல், அந்நாட்டில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு பயணத்தை எளிதாக்கும்.
தாய்லாந்து மற்றும் மலேசியா ஏற்கனவே இந்தியர்களுக்கு விசா இல்லாத பயணத்திற்கு அனுமதி (Visa-Free-Entry) வழங்கியுள்ளன .
தைவானும் இந்தக் கொள்கையை அமுல்படுத்தினால், இந்திய சுற்றுலாப் பயணிகள் அந்நாட்டிற்குச் செல்வது எளிதாகிவிடும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
India Taiwan relations, Thailand Malaysia Taiwan, Taiwan proposes visa-on-arrival for Indian citizens, Taiwan tourism