தைவானைச் சுற்றி காணப்பட்ட 40 சீன விமானங்கள், 8 கடற்படை கப்பல்கள்
தைவானைச் சுற்றி 40 சீன விமானங்கள், 8 கடற்படை கப்பல்கள் காணப்பட்டுள்ளன.
தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் (MND), வியழகிழமை (டிசம்பர் 18) காலை 6 மணியளவில், சீனாவின் 40 ராணுவ விமானங்கள் மற்றும் 8 கடற்படை கப்பல்கள் தைவானைச் சுற்றி இயங்குவதை கண்டறிந்ததாக அறிவித்துள்ளது.
அவற்றில் 26 விமானங்கள் தைவான் நீரிணையின் நடுக்கோட்டை (median line) கடந்து, தைவானின் வடக்கு, மத்திய, தென்மேற்கு மற்றும் கிழக்கு ADIZ பகுதிகளில் நுழைந்துள்ளன.
தைவான் ஆயுதப்படைகள் நிலைமையை கண்காணித்து, தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முந்தைய நாள் நிலைமை
புதன்கிழமையன்று (டிசம்பர் 17), தைவான் 23 சீன விமானங்களை கண்டறிந்தது. அதில் 14 விமானங்கள் நடுக்கோட்டை கடந்து ADIZ பகுதிகளில் நுழைந்தன. இவை J-10, H-6K, KJ-500 போன்ற பல்வேறு வகை விமானங்களாகும்.
மேலும், சீன கடற்படையின் Fujian (CV-18) விமானக் கப்பல் தைவான் நீரிணையை கடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ஆதரவு
இந்நிலையில், அமெரிக்க செனட், Porcupine Act எனப்படும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இது, அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணங்களை தைவானுக்கு விரைவாக வழங்கவும், கூட்டாளிகள் இடையே இராணுவ உபகரணங்களை எளிதாக பரிமாறவும் உதவும்.
இந்த மசோதா தற்போது அமெரிக்க ஹவுஸ் ஆஃப் ரெப்ரெசென்டட்டிவ்ஸ் முன் செல்ல உள்ளது. அங்கு நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி கையொப்பம் இட்ட பின் சட்டமாகும்.
சீனாவின் தொடர்ச்சியான விமான மற்றும் கடற்படை நடவடிக்கைகள், தைவானின் பாதுகாப்பு சூழ்நிலையை மேலும் சிக்கலாக்குகின்றன.
அதேசமயம், அமெரிக்காவின் புதிய சட்டம், தைவானுக்கு பாதுகாப்பு ஆதரவாக முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Taiwan detects 40 Chinese aircraft 2025, PLA jets cross Taiwan Strait median line, Chinese naval vessels near Taiwan ADIZ, Taiwan Ministry of National Defense update, Fujian aircraft carrier transits Taiwan Strait, US Porcupine Act Taiwan defense support, Taiwan Strait tensions China military drills, Taiwan security response Chinese incursions, Taiwan China conflict latest military news, Taiwan ADIZ violations Chinese sorties