தைவானை சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது: சீன ஜனாதிபதி ஜின்பிங் உறுதி
தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்பதை யாராலும் தடுக்க முடியாது என்று சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
தைவான் - சீனா இடையே அதிகரிக்கும் பதற்றம்
1949 ஆண்டில் சீனாவிடம் இருந்து பிரிந்து தைவான் தன்னை சுயாதீன தனி நாடாக அறிவித்துக் கொண்டது.
ஆனால் தைவானை சீனா தொடர்ந்து தன்னுடைய நாட்டின் ஒரு அங்கமாகவே கருதி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தைவானை சீனாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்காக சீனா தொடர் ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
அத்துடன் தைவான் எல்லைக்குள் சீனா தொடர்ந்து போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை அனுப்பி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
மேலும் தைவானுடன் எந்தவொரு நாடும் தூதர உறவினை வைத்துக் கொள்ள கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜி ஜின்பிங் புத்தாண்டு உரை

இந்நிலையில் 2026ம் ஆண்டு புத்தாண்டை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அந்நாட்டு மக்களிடையே புத்தாண்டு உரையாற்றினார்.
அதில், தைவானை சீனா தன்னுடைய சொந்த பிரதேசமாக கருதுகிறது, தற்போது தைவானை சீனாவுடன் அதிகாரப்பூர்வமாக இணைப்பதற்கான காலம் வந்துவிட்டதாக கூறிய அவர், தைவானை மீண்டும் சீனாவுடன் இணைப்பதை எந்தவொரு சக்தியாலும் தடுக்க முடியாது என்றும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உறுதியளித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |