ஓய்வூதியத்திற்காக தந்தையின் உடலை மறைத்த மகள்: தைவானில் நடந்த கொடுமை!
தைவானில் ஓய்வூதியத்தை பெற தந்தையின் உடலை பெண் மறைத்து வைத்த இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணின் சந்தேகத்திற்கு இடமான நடவடிக்கை
தைவானை சேர்ந்த பெண் ஒருவர், தனது இறந்துபோன தந்தையின் உடலை வீட்டில் மறைத்து வைத்து, அவரது ஓய்வூதியத்தை பெற்றுக்கொள்ள முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
50 ஆண்டுகளுக்கும் மேலாக தனது தந்தையுடன் வசித்து வந்த அந்த பெண், வழக்கமான பரிசோதனைக்காக வந்த சுகாதார அதிகாரிகளை தொடர்ந்து வீட்டிற்குள் அனுமதி மறுத்துள்ளார்.
இந்த திடீர் விசித்திரமான நடவடிக்கை அதிகாரிகளுக்கு சந்தேகத்தை அதிகரிக்க செய்து விசாரணை தீவிரப்படுத்த தூண்டியது.
அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு
விசாரணையில் சம்பந்தப்பட்ட பெண்ணின் கூற்றுகள் சந்தேகத்தை அதிகரிக்க செய்ததை தொடர்ந்து, பொலிஸார் வீட்டை சோதனை செய்ய வழிவகுத்தது.
அவர்களின் சோதனையில் வயதானவரின் எலும்புக்கூடுகள் கொண்ட ஒரு பிளாஸ்டிக் பை இருக்கும் அதிர்ச்சியூட்டும் கண்டுபிடிப்பு கிடைத்தது. நிபுணர் பரிசோதனையில், எச்சங்கள் நீண்ட நேரம் இருந்ததாகவும், பெண் சொல்வதை விட தந்தை மிக முன்னதாகவே இறந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில், அந்த பெண்ணின் தந்தை 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் என்பதும், அவரது பதவி மற்றும் பணி வரலாற்றின் அடிப்படையில் மாத ஓய்வூதியம் பெற்றதாகவும் கண்டறியப்பட்டது.
சராசரியாக மாத ஓய்வூதியமாக தைவான் ராணுவ வீரர்கள் NT$49,379 (₹ 1.27 லட்சம்) பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விவரம் குற்றத்திற்கான சாத்தியமான காரணத்தை தெளிவுபடுத்துகிறது.
தொடரும் விசாரணை
விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது, அதிகாரிகள் இறப்புக்கான காரணம் மற்றும் சாத்திய குற்றச்சாட்டுகளை ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |