ஆப்கானில் பெண்கள் கல்வி கற்கலாம்.. ஆனால்.. சில நிபந்தனைகள் உண்டு! தாலிபான்கள் வெளியிட்ட புதிய அறிவிப்பு
ஆப்கானில் பெண்கள் கல்வி கற்க அனுமதியளித்து அதன் கூடவே சில நிபந்தனைகளையும் தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த மே மாதம் வெளியேற தொடங்கின. இதையடுத்து கடந்த மாதம் 15ஆம் தேதி ஆப்கானில் இருந்து அமெரிக்க ராணுவ படைகள் முழுவதுமாக வெளியேறிய நிலையில் நாடு முழுவதும் தாலிபான்கள் வசம் சென்றது.
தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகின்றது. தாலிபான்கள் ஆட்சியில் பெண் உரிமைகள், சுதந்திரம் போன்றவற்றை மறுக்கப்படுகிறது.
தாலிபான்கள் புதிதாக தொடங்கிய ஆட்சியில் பெண்களுக்கு எந்தவித பதவிகளும் வழங்கப்படவில்லை. விளையாட்டு நிகழ்ச்சிகளில் பெண்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் பெண்கள் கல்வி கற்கவும் பலவித நிபந்தனைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்திந்த அப்துல் பாகி ஹக்கானி கூறியது, பெண்கள் கல்வி கற்க நாங்கள் அனுமதி அளிக்கிறோம்.
ஆனால் அவர்கள் கண்டிப்பாக பர்தா அணிந்து மட்டுமே கல்வி நிலையங்களுக்கு வர வேண்டும். பெண் பிள்ளைகளுக்கு பெண் ஆசிரியர் பாடம் நடத்துவர். பல்கலைகழகங்களில் இருப்பாலர்களுக்கு இடமில்லை. கண்டிப்பாக எடுக்க வேண்டிய சூழ்நிலை வந்தால் நடுவே திரை வைப்பது கட்டாயம்.
பெண் பிள்ளைகளுக்கு ஆண்கள் வகுப்பு எடுக்க நேர்ந்தால் ஆன்லைன் வாயிலாக மட்டுமே எடுக்க வேண்டும் என்று புதிய நிபந்தனைகள் தெரிவித்துள்ளார்.