பெண்கள் பொதுயிடத்தில் முகத்தை மறைக்கவில்லையென்றால் தந்தைக்கு சிறை! தலிபான் ஆணை
ஆப்கான் பெண்கள் பொதுயிடத்தில் கட்டாயமாக முகத்தை மூட வேண்டும் என தலிபான் அரசாங்கம் ஆணை பிறப்பித்துள்ளது.
காபூலில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில், நல்லொழுக்கத்தைப் பரப்புதல் மற்றும் ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளை தடுப்பதற்கான அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் , குழுவின் உச்ச தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்சாதா குழுவின் ஆணையைப் படித்தார்.
பெண் ஒருவர் வீட்டிற்கு வெளியே முகத்தை மறைக்கவில்லையென்றால், அவரின் தந்தையோ அல்லது நெருங்கிய ஆண் உறவினரோ இறுதியில் சிறையில் அடைக்கப்படுவார்கள் அல்லது அரசாங்க வேலைகளில் இருந்து நீக்கப்படுவார்கள்.
யுவன் சங்கர் ராஜாவுக்கு சீமான் வாழ்த்து!
நீல நிற புர்காதான் முகத்தை மூடுவதற்கு சிறந்ததாக இருக்கும் என அவர்கள் கூறினார்கள்.
ஆப்கானிஸ்தானில் பெரும்பாலான பெண்கள் மத காரணங்களுக்காக முக்காடு அணிகின்றனர். ஆனால் காபூல் போன்ற நகர்ப்புறங்களில் பலர் முகத்தை மறைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.