இங்கு வெளிநாட்டு கரன்சியை பயன்படுத்த கூடாது! தாலிபான்கள் அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் வாழும் மக்கள் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த கூடாது என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதில் இருந்து அந்நாட்டை தாலிபான்கள் ஆட்சி செய்து வருகின்றனர். எங்கள் ஆட்சி கடந்த முறை போல் மோசமாக இருக்காது என்றும் பெண்களுக்கு உரிமை வழங்கப்படும் என்று தெரிவித்தனர்.
அது மட்டும் இல்லாமல் பொருளாதாரம் சீரமைக்கப்படும் என்று வாக்கு கொடுத்தனர். ஆனால் தலிபான்கள் ஆட்சியில் பொருளாதாரம் மிகவும் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.
ஆப்கானில் வசிக்கும் மக்களை பசி, பட்டினி போன்றவை வாட்டி வதைத்து வருகின்றது. இந்நிலையில் மக்கள் வீட்டில் உள்ள பொருள்களை விற்று சாப்பிடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதையடுத்து அந்நாட்டில் வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த கூடாது என்று தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தி தொடர்பாளர் ஜிபுல்லா முகாகித் கூறியதாவது, மக்கள், கடை உரிமையாளர்கள், வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைவரும் கட்டாயமாக வெளிநாட்டு நாணயங்களை பயன்படுத்த கூடாது என்று தெரிவித்துள்ளார்.
இதை மீறினால் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று எச்சரிக்ககை விடுத்துள்ளார். ஆப்கானில் பெரும்பாலும் அமெரிக்க கரன்சிகள் தான் அதிக புழக்கத்தில் உள்ள நிலையில் தாலிபான்களின் திடீர் உத்தரவால் மக்கள் தவித்து வருகின்றனர்.