தேசம் முழுவதும் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தடை! பிரபல நாடு அதிரடி அறிவிப்பு
ஆப்கானிஸ்தான் முழுவதும் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்த தாலிபான்கள் தடை விதித்துள்ளனர்.
கடந்த ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்களை கைப்பற்றிய தாலிபான்கள், புதிய இடைக்கால அரசாங்கத்தை அமைத்துள்ளனர்.
தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியதை தொடர்ந்து சர்வதேச நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கு அளித்த வந்த ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டனர்.
இதனிடையே, உலக நாடுகள் ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் என தாலிபான்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
சமீபத்தில், ஆப்கானிஸ்தானை அங்கீகரிக்காவிட்டால் உலகம் முழுவதும் பிரச்சினை வெடிக்கும் என தாலிபான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் வெளிநாட்டு பயணத்தை முழுமையாக பயன்படுத்த தடை விதிப்பதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
தாலிபான் செய்தித்தொடர்பாளர் Zabihullah Mujahid இந்த அறிவிப்பை இணையத்தில் பதிவிட்டார்.
அதில், இஸ்லாமிய எமிரேட் அனைத்து குடிமக்கள், கடைக்காரர்கள், வர்த்தகர்கள், வணிகர்கள் மற்றும் பொது மக்களை ‘ஆப்கானிஸில்’ அனைத்து பரிவர்த்தனைகளையும் நடத்தவும் மற்றும் வெளிநாட்டு பணத்தை பயன்படுத்துவதை கண்டிப்பாக தவிர்க்கவும் அறிவுறுத்துகிறது.
இந்த உத்தரவை மீறுபவர்கள் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தாலிபான் நாட்டைக் கைப்பற்றியதை தொடர்ந்து சர்வதேச நாடுகள் ஆதரவை திடீரென விலக்கிக் கொண்டதன் மூலம் சரிவின் விளிம்பிற்குத் தள்ளப்பட்ட பொருளாதாரத்திற்கு மேலும் சீர்குலைவை ஏற்படுத்தும் நடவடிக்கை இது என பலர் விமர்சித்துள்ளனர்.