"என்னை கொன்றுவிடு" சித்திரவதை செய்த தாலிபானிடம் கெஞ்சிய திருடன்!
ஆப்கானிஸ்தானில் குற்றம் சாட்டப்படும் நபர்களை கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு, பொது வெளியில் அவமானப்படுத்தப்பட்டு, பயங்கரமான தண்டனைகளை தாலிபான்கள் வழங்கிவருகின்றனர்.
ஆகஸ்ட் மாதத்தில் பிரித்தானிய மற்றும் அமெரிக்க இராணுவ படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அதிகாரத்தை தலைபாங்கள் கைப்பற்றினர்.
அப்போது, தங்கள் முந்தைய கடுமையான போக்கை மாற்றிக்கொள்வதாக உறுதியளித்த தாலிபான்கள், மீண்டும் அவர்கள் எந்த விதத்திலும் மாறவில்லை என்பதை நிரூபித்து வருகின்றனர்.
சமீப நாட்களாக, தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பெண்கள் மீதான வன்முறை, ஒடுக்குமுறை, கொடூரமான தண்டனை முறைகளையே கடைப்பிடித்து வருகின்றனர்.
தொடர்ந்து பல உயிர்களை அவர்கள் கொடூரமாக கொலை செய்து பொது வெளியில் சடலங்களை தொங்கவிட்டு மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 5) ஹெராத் மாகாணத்தில் உள்ள ஓபே மாவட்டத்தில் துணை ஆளுநர் மவ்லவி ஷிர் அஹ்மத் முஹாஜிர் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்தபோது ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் 3 குற்றவாளிகளின் சடலங்களை, பொதுவெளியில் தாலிபான்கள் இரண்டு கிரேன்களில் கட்டி தொங்கவிடப்பட்டது.
அதேபோல் நேற்று, தெற்கு கந்தஹார் மாகாணத்தில் ஒருவரை திருடியதாக குற்றம்சாட்டி பிடித்த தாலிபானைகள், அந்த நபர் மேல் அமர்ந்து பொது மக்கள் முன்னிலையில் வைத்த இரும்பு கம்பிகளால் முகத்திலே இரத்தம் கொட்டக்கொட்ட அடித்து அவமானப்படுத்தினர்.
அப்போது, அந்த நபர் தாலிபான்களிடம் "என்னை சித்திரவதை செய்யாதே, என்னை கொன்றுவிடு" என்று கெஞ்சியுள்ளார்.
இது போன்ற சம்பவங்கள் தாலிபான்களின் உண்மை ரூபங்களை வெளிப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.