ஆப்கானில் பெண்களுக்கு கல்வி எப்போது? தாலிபான் கொடுத்த தெளிவான விளக்கம்
ஆப்கானில் பெண்களுக்கு கல்வி உரிமை விரைவில் வழங்கப்படும் என தாலிபான்கள் உறுதியளித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் பெண்கள் விரைவில் பள்ளிக்கு திரும்பலாம் என்றும் அதற்கான அதிகாரபூர்வ தகவல் கூடிய விரைவில் வெளியாகும் என்று தாலிபான்கள் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாம் மத சட்டங்களை கடுமையாக அமல்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக பெண்களுக்கு கல்வி மற்றும் வேலையில் உரிமை மறுக்கப்பட்டு வருகின்றது. இதையடுத்து, ஆண்களைப் போலவே பெண்களுக்கும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமஉரிமை கோரி அந்நாட்டு பெண்கள் காபூலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளிவந்தன.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தலிபான் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளரிடம் பேசிய ஜபிஹுல்லா முஜாஹித் விரைவில் பெண்கள் பள்ளிகளில் அனுமதிக்கப்படுவர். அதற்கான அதிகாரபூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்றும் தெரிவித்தார்.