சடலத்தை தொங்கவிட்ட படி ஆப்கான் நகரின் மீது பறந்த அமெரிக்க ஹெலிகாப்டர்! கமெராவில் சிக்கிய பதற வைக்கும் காட்சி
ஆப்கானிஸ்தானில் சடலத்தை தொங்கவிட்ட படி அமெரிக்க ஹெலிகாப்டரில் தாலிபான்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
kandahar நகரிலே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 31ம் தேதியோடு வெளிநாட்டு படைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தாலிபன்கள் உத்தரவிட்டிருந்த நிலையில், அமெரிக்க உட்பட அனைத்து வெளிநாட்டு படைகளும் ஆப்கானை விட்டு வெளியேறின.
அமெரிக்கப்படை வெளியேறிய சில மணிநேரங்களில் kandahar நகரில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில், சடலம் ஒன்றை தொங்கவிட்ட படி அமெரிக்க இராணுவ ஹெலிகாப்டர் பறந்து செல்கிறது.
Our Air Force!
— Talib Times (@TalibTimes) August 30, 2021
At this time, the Islamic Emirate's air force helicopters are flying over Kandahar city and patrolling the city. pic.twitter.com/rlE6nUldZf
இஸ்லாமிய எமிரேட் ஆப்கானிஸ்தான் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிக்கான பக்கம் என கூறிக்கொள்ளும் Talib Times, இது நமது விமானப்படை தான்! இஸ்லாமிய எமிரேட்ஸின் விமானப்படை ஹெலிகாப்டர்கள் kandahar நகரத்தின் மீது பறந்து நகரத்தில் ரோந்து சுற்றி வருகின்றன என வீடியோவுடன் பதிவிட்டுள்ளது.