ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை; நேரத்தை வீணாக்கும் என தலிபான் அரசு விளக்கம்
taliban government defend ban protest in afghanistan: ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த விதித்த தடையை தலிபான் அரசு நியாயப்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் போராட்டம் நடத்த தடை
ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றிய தலிபான்கள் பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் மீது அடக்குமுறைகளை கையாளும் வகையில் பல்வேறு சட்டங்களை இயற்றி வருகின்றனர்.

கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் பொதுமக்கள் போராட்டம் நடத்துவதற்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது.
இந்த தடைக்கு, சமூக ஆர்வலர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால், இஸ்லாமிய சட்டத்தில் போராட்டங்களுக்கு அனுமதி இல்லை எனக்கூறி தலிபான் அரசு இந்த தடையை நியாயப்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தலிபான் அரசின் செய்தித்தொடர்பாளர் சபியுல்லா முஜாஹித், "போராட்டங்கள், ஜனநாயகம் அல்லது குடியரசு போன்ற சட்டங்கள் நடைமுறையில் உள்ள சமூகங்களைச் சேர்ந்தவை.

இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில், மக்கள் தங்களின் பிரச்னைகளுக்குப் போராட்டம் நடத்துவதற்குப் பதிலாக நேரடியாக அரசைத் தொடர்புகொள்ள முடியும்.
மேலும், இந்தத் தடை மக்களின் நேரத்தை வீணாக்குவதில் இருந்தும், தனியார் சொத்துக்கள் அழிக்கப்படுவதிலிருந்தும் பாதுகாக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |