பொது இடத்தில் சடலங்களை தொங்கவிட்டு எச்சரித்த தலிபான்கள்! ஆப்கானிஸ்தானில் தொடரும் கொடுங்கோல் ஆட்சி
ஆப்கானிஸ்தானில் கொள்ளை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட இரண்டு நபர்களின் சடலங்களை தாலிபான்கள் பொது இடத்தில் தொங்கவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Herat மாகாணத்தில் உள்ள obe மாவட்டத்திலே இரண்டு நபர்களின் சடலங்கள் ஜேசிபி மூலம் தொங்கவிடப்பட்டுள்ளது.
குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை எச்சரிக்கை வகையில் தலிபான்கள் பொதுயிடத்தில் சடலங்களை தொடங்கவிட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து Herat மாகாண கவர்னர் Maulvi Shirahmad Ammar அளித்த தகவலின் படி, திங்கட்கிழமை அக்டோபர் 4ம் திகதி Obe மாவட்டத்தில் உள்ள வீடொன்றில் நுழைந்த இரண்டு நபர்கள் கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்.
வீட்டிற்குள் நுழைந்து கொள்ளையடிக்க முயன்ற இருவரையும் உரிமையாளர் கொன்றுவிட்டார்.
கொள்ளை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட இருவரின் சடலமும் மாவட்டத்தின் மையத்தில் தொங்கவிடப்பட்டது என கூறினார்.
طالبان جسدهای دو فرد متهم به سرقت را در هرات آویزان کردندhttps://t.co/PKf6OwysRx pic.twitter.com/stB5A0y2EH
— Aamaj News (@AamajN) October 5, 2021
இதுபோன்று குற்றம்சாட்டப்படும் வழக்குகள் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும், சடலங்களை பொதுவெளியில் தொடங்கவிடப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என Herat வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.