துடி துடிக்க தூக்கிலிட்டு கொன்று.. சுற்றி நின்று சடலங்களை சரமாரியாக துப்பாக்கியால் சூடும் தலிபான்கள்! நடுங்க வைக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்களின் மிருகத்தனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டும் கொடூர வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து, அஷ்ரப் கனி அரசாங்கத்தில் பணியாற்றி பலர் அதிகாரிகள், உயிருக்கு பயந்து நாட்டை விட்டு ஓடிவிட்டனர்.
எனினும், தங்களுக்கு எதிராக செயல்பட்ட அரசு அதிகாரிகளை வீடு வீடாக தேடி கண்டுபிடித்து தலிபான்கள் கொன்றதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
முக்கிய மாகாணத்தின் பொலிஸ் அதிகாரியை பிடித்த தலிபான்கள், அவரை கொடூரமாக சுட்டுக்கொன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதேசமயம், தலிபான்களால் முன்னாள் அரசு ஊழியர்களுக்கு எந்தவித பிரச்சினையும் ஏற்படாது, ஷியா சட்டப்படி நாட்டில் பெண்களுக்கான உரிமை வழங்கப்படும் என போராளிகள் குழுவின் செய்தித்தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.
ஆனால், ஆகஸ்ட் 31ம் திகதியோடு ஆப்கானிஸ்தானை விட்டு வெளிநாட்டுப்படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலிபான்கள் தங்கள் நிஜ முகத்தை காட்ட தொடங்கியுள்ளனர்.
உரிமை கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை அடித்து விரட்டியடிப்பது, போராட்டங்களை துப்பாக்கிச் சூடு நடத்தி போராட்டகாரர்களை அச்சுறுத்துவது என அட்டூழியங்கள் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், தலிபான் போராளிகள் இரண்டு பேரை துடி துடிக்க தூக்கிலிட்டு கொல்லும் ஈரக் குலையை நடுங்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.
Footage of #Taliban hanging two person & shot them right after. pic.twitter.com/csFOKJSn9I
— MR Dawod Zai? (@MrDawodZai) September 14, 2021
வீடியோவில், பாலைவனம் போன்ற இடத்தில் கட்டை கட்டி இரண்டு ஆண்களை துடி துடிக்க தூக்கிலிட்டு கொல்லும் தலிபான் போராளிகள், பின் உயிரற்று தொங்கும் சடலங்களை சுற்றி நின்று சரமாரியாக துப்பாக்கியால் சுடுகின்றனர்.
குறித்து வீடியோ எங்கு எப்போது எடுக்கப்பட்டது, கொல்லப்பட்டவர்கள் யார் 
போன்ற விவரங்கள் தெரியவில்லை.     
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        