நான்கு பேரை கொன்று சடலங்களை பொது இடங்களில் தொங்கவிட்ட தலிபான்கள்! ஏதற்காக? பதபதைக்க வைக்கும் வீடியோ
ஆப்கானிஸ்தானில் பொதுவெளியில் சடலங்கள் தொங்கவிடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் ஹெராட் நகரிலே இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
சம்பவம் குறித்து Tolo நியூஸ்-ன் Miraqa Popal ட்விட்டரில் வீடியோவுடன் பதிவிட்டதாவது, கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்படட நான்கு பேரின் சடலங்களை ஹெராட் நகரின் வெவ்வேறு பகுதிகளில் தலிபான்கள் தொங்கவிட்டதாக கூறியுள்ளார்.
கடத்தல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை ஏதும் நடத்தாமல், நான்கு பேரையும் தலிபான்கள் சுட்டுக்கொன்றதாக கூறப்படுகிறது.
பின், இனி கடத்தல் சம்பவங்களில் ஈடுபட நினைப்பவர்களுக்கு இது தான் கதி என எழுதப்பட்ட போஸ்டரை சடலங்களின் மேல் ஓட்டி, ஹெராட் நகரின் பொதுஇடங்களில் கிரேன் மூலம் சடலங்களை தலிபான்கள் தொங்கவிட்டுள்ளனர்.
வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்...
குறித்த வீடியோவில் ஹெராட் நகரில் உள்ள சதுக்கம் ஒன்றிற்கு அருகே, ரத்தத்துடன் கிரேனில் சடலம் ஒன்று தொங்கவிடப்பட்டுள்ளதை காட்டுகிறது.
வீடியோவை காண இங்கிகே கிளிக் செய்யவும்...
அதேசமயம், ஹெராட் நகரில் மொத்தம் 7 கடத்தல்காரர்கள் கொல்லப்பட்டதாக Ariana News தெரிவித்துள்ளது.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        