கர்ப்பிணிப்பெண்ணை வயிற்றில் எட்டி உதைத்த தாலிபான்கள்... பதறவைக்கும் மற்றொரு சம்பவம்
தன் தந்தை மற்றும் கணவருடன் காபூலுக்கு தப்பி வர முயன்ற கர்ப்பிணிப்பெண் ஒருவரை தாலிபான்கள் வயிற்றில் எட்டி உதைத்ததாக பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
நஸ்ரியா என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண் ஒரு அமெரிக்கக் குடிமகள் ஆவார். அமெரிக்கா மீட்புப்பணிகளை முடித்துக்கொண்டுள்ள நிலையில் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களில் கலிபோர்னியாவைச் சேர்ந்த நஸ்ரியாவும் அவரது கணவரும் அடங்குவர். எப்படியாவது அமெரிக்கா செல்லும் மீட்பு விமானம் ஒன்றைப் பிடித்துவிடவேண்டும் என தம்பதியர் பலமுறை முயற்சி செய்துள்ளனர்.
தாலிபான்கள் வழியெங்கும் அமைத்துள்ள செக்போஸ்டுகளைத் தாண்டி வந்தும், நஸ்ரியாவால் விமான நிலையம் வர முடியாமல் போய்விட்டிருக்கிறது. அப்படி தப்ப முயலும்போதுதான், தாலிபான்கள் சிலர் கர்ப்பிணிப்பெண்ணான அவரை வயிற்றிலேயே எட்டி உதைத்துள்ளார்கள்.
அமெரிக்காவுக்குத் திரும்ப இயலாமல் திகைத்துப்போயிருக்கும் நஸ்ரியா, தற்போது தன் அடையாளத்தை மறைத்துக்கொண்டு ஓரிடத்தில் மறைந்திருக்கிறார். அவரை மீட்பதற்கான முயற்சியில் கலிபோர்னியா நாடாளுமன்ற உறுப்பினரான Darrell Issa என்பவர் இறங்கியுள்ளார்.
நஸ்ரியாவை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை, மறைந்திருக்கும் அவருக்கு அவரது நண்பர்கள் இரகசியமாக உணவு கொண்டு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
தாலிபான்களக இருந்தாலும் அவர்களும் ஒரு தாய் வயிற்றில்தானே பிறந்திருப்பார்கள், அவர்களது பிள்ளைகளையும் பெண்கள்தானே பெற்றெடுத்திருப்பார்கள்? ஆனாலும் சற்றும் இரக்கமின்றி கர்ப்பிணிகளைக் கூட கொடுமைப்படுத்தும் இந்த ஈவிரக்கமற்ற கூட்டத்தை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை.
ஏற்கனவே, கர்ப்பிணியாக இருந்த மற்றொரு பெண் தாலிபான்களை நேருக்கு நேராக பார்த்துவிட்டார் என்பதற்காக, அவர் கர்ப்பிணி என்றும் பார்க்காமல் தாலிபான்கள் தாக்கியதில் அவர் படுகாயமடைந்திருக்கிறார். அத்துடன், தங்களை நேருக்கு நேராக பார்த்த அவரது கண்களையும் அவர்கள் பிடுங்கிவிட்டார்களாம்...
இவர்கள் எப்படி பெண்களுக்கு சம உரிமை கொடுப்பதைப் பற்றி வாய் கூசாமல் பேசுகிறார்களோ தெரியவில்லை!