ஆப்கானிஸ்தானில் திருமண வீட்டில் 13 பேரை கொலை செய்த தாலிபான்கள்! இசை நிகழ்ச்சியை தடுக்க செய்த கொடுஞ்செயல்
ஆப்கானிஸ்தானில் திருமண விழாவில் நடந்த இசை நிகழ்ச்சியை தடுத்து நிறுத்த தாலிபான்கள் 13 பேரை சுட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இசை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதியில்லை என தாலிபான்கள் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையிலேயே இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த தகவலை அந்நாட்டின் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சாலே டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.
அவரின் பதிவில், நங்கர்ஹர் என்ற இடத்தில் திருமண நிகழ்வில் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பதை அறிந்த தாலிபான் பயங்கரவாதிகள் 13 பேரைச் சுட்டுக் கொன்றுள்ளனர்.
இது தொடர்பாக நாம் கண்டனம் தெரிவிப்பதால் மட்டும் கோபத்தை வெளிப்படுத்த முடியாது. 25 வருடங்களாக ஆப்கானிய கலாச்சாரத்தை அழிக்கவும், நமது மண்ணை கட்டுப்படுத்த ஐஎஸ்ஐயின் கலாச்சாரத்தை திணிக்கவும் பாகிஸ்தான் அவர்களுக்கு பயிற்சி அளித்தது.
அது இப்போது செயல்பாட்டில் வந்துவிட்டது என தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாலிபான்கள் விடுத்துள்ள அறிக்கையில், வெறும் கண்டனத்தால் மட்டும் தங்களின் ஆத்திரத்தை தீர்த்துக் கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளனர்.
இசைக்கு இனி ஆப்கானிஸ்தானில் அனுமதி இல்லை என கூறப்பட்டதால் தங்களுக்கு மாற்று வேலைகளை அமைத்து தறுமாறு இசைகலைஞர்கள் ஏற்கனவே தாலிபான்களிடம் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.