பச்சிளம் குழந்தைகளை கொன்று குவிக்கும் தலிபான்கள்! வெளியான கதிகலங்க வைக்கும் புகைப்படங்கள்
தலிபான்கள் அப்பாவி குழந்தைகளை கொல்கிறார்கள் என ஆப்கானிஸ்தானின் முன்னாள் உள்துறை அமைச்சர் Masoud Andarabi கூறியுள்ளார்.
தாலிபான் போராளிகளால் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் ஒரு சிறு குழந்தை உட்பட அதிர்ச்சி தரும் புகைப்படங்களை Masoud Andarabi ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
தலிபான்கள் சிறு குழந்தைகள் மற்றும் வயதான குடிமக்களைக் கொன்று மக்களை பயமுறுத்தி ஆள முயற்சிக்கின்றனர்.
தலிபான்கள் இத்தகைய நடவடிக்கைகளால் தேசத்தை ஆள முடியாது.
பாக்லான் மாகாணத்தின் அந்தராப் கிராமத்தில் , தலிபான்கள் காரணமில்லாமல் வீடுகளில் சோதனை நடத்தி, காரணமின்றி அல்லது நியாயமின்றி மக்களை கைது செய்து அப்பாவி குடிமக்களைக் கொன்று குவிக்கின்றனர்.
இதன் விளைவாக, தலிபான்களின் கொடூரத்திற்கு எதிராக அவர்களின் உயிர்கள், மரியாதை, கண்ணியம் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க மக்கள் வெகுண்டெழ வேண்டும் என Masoud Andarabi கூறியுள்ளார்.\
killing innocent citizens. As a result, people have had to rise against their brutality to protect their lives, honor, dignity and property.
— Masoud Andarabi (@andarabi) August 24, 2021
கடந்த மார்ச் மாதத்தில் ஆப்கானிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி அஷ்ரப் கனியால் Masoud Andarabi பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.