பாகிஸ்தான் குண்டுவீச்சுக்கு பதிலடி- மனிதவெடிகுண்டுகளை தயார் செய்த தாலிபான்கள்
ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் பாகிஸ்தான் நடத்திய குண்டுவீச்சுக்கு பதிலடி நடவடிக்கையாக தாலிபான்கள் தற்கொலைப் படையை தயார் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தான், காபூல், காந்தஹார், பாக்தியா உள்ளிட்ட பகுதிகளில் தாலிபான் தலைமையகங்கள், ஆயுத கிடங்குகள் மீது வான் மற்றும் தரைவழி தாக்குதல்கள் நடத்தியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தாக்குதல்களில் 133 தாலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும், 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.
அதேசமயம், தாலிபான்கள் 55 பாகிஸ்தான் வீரர்கள் உயிரிழந்ததாகவும், பல இடங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர், “எங்கள் பொறுமை கிண்ணம் நிரம்பிவிட்டது. இனி இது பகிரங்கமான போர் தான்” எனக் கூறியுள்ளார். இதனால் 2,600 கி.மீ நீள எல்லைப் பகுதியில் நீண்டகால மோதல் உருவாகும் அபாயம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹாரில் தாலிபான்கள் தற்கொலைப் படையைத் தயாராக வைத்திருப்பதாக அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
வெடிகுண்டுகள் மற்றும் கார் குண்டுகளுடன் ஆயுதப்படை வீரர்கள் முக்கிய இலக்குகளைத் தாக்கத் தயாராக உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரு தரப்பும் எல்லைப் பகுதிகளில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு, பல இடங்கள் அழிக்கப்பட்டதாகவும், பொதுமக்கள் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த மோதலால், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் உறவுகளை மேலும் மோசமாகும் அபாயம் நிலவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |