யாரும் வெளியேற வேண்டாம்! பாகிஸ்தான் எல்லையில் கெஞ்சும் தாலிபான்கள் ..வைரலாகும் புகைப்படம்
சொந்த நாட்டை விட்டு வெளியேறும் ஆப்கான் மக்களை தாலிபான்கள் வழிமறைத்து இது உங்கள் நாடு யாரும் வெளியேற வேண்டாம் என்று கெஞ்சி வருகின்றனர்.
ஆப்கான் முழுவதும் தாலிபான்கள் வசம் சென்றுள்ளது. தாலிபான்களின் கடுமையான ஆட்சிமுறை மேல் உள்ள பயத்தால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேறி பல்வேறு நாடுகளுக்கு அகதிகளாக செல்கின்றனர்.
ஆப்கானில் வேலை இல்லாத திண்டாட்டம் அதிகமாகிவிட்டதால் மக்கள் பொருளாதாரம் ரீதியாக ஏற்பட்ட சிக்கல் காரணமாகவும் வேறு வழி இல்லாமல் வெளியேறி வருகின்றனர்.

தற்போது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் எல்லை பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள ஸ்பின் போல்டக் பகுதியில் தாலிபான்கள் முகாமிட்டுள்ளனர்.
அங்கிருந்து நாட்டை விட்டு வெளியேறும் சொந்த மக்களை தடுத்து நிறுத்திய தாலிபான்கள் இது உங்கள் நாடு.. இதைவிட்டு யாரும் வெளியே செல்லாதீர்கள் என்று கெஞ்சி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு சென்றால் ஏதாவது வேலை கிடைக்கும் என்பதால் தங்களது நாட்டை விட்டு செல்வதாக ஆப்கான் மக்கள் தரப்பில் கூறப்படுகிறது.

ஆனால் ஆகஸ்ட் மாதம் வரை மக்களை அனுமதித்த பாகிஸ்தான் தற்போது சரியான ஆவணங்கள் இருப்பவர்களை மட்டுமே அனுமதிப்பதாக கூறப்படுகிறது.