கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.. குறிப்பாக அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கு தலிபான் பகிரங்க எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தான் வான்வெளியில் அமெரிக்க அதன் டிரோன்களை சட்டவிரோதமாக தொடர்ந்து இயக்கினால் கடும் வினைவுகளை சந்திக்க நேரிடும் என தலிபான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 26ம் திகதி காபூல் விமான நிலையத்தில் நடந்த தற்கொலை தாக்குதலுக்கு பொறுப்பேற்ற ஐ.எஸ்-கே குழுவை குறிவைத்து கடந்த மாதம் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நடத்திய டிரோன் தாக்குதலில் 7 குழந்தைகள் உட்பட பொதுமக்கள் 10 பேர் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தான் முழுவதும் பயங்கரவாதிகளை குறிவைத்து தொடர்ந்து டிரோன் தாக்குதல் நடத்தும் உரிமையை அமெரிக்கா தானகவே எடுத்துக்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்துள்ள தலிபான் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் வான்வெளி உட்பட நாட்டின் பிரதேசங்களை பாதுகாப்பதற்கான பொறுப்பை சுட்டிக்காட்டிய தலிபான், பிப்ரவரி 2020 தோஹா அமைதி ஒப்பந்தத்தின் கீழ் அமெரிக்காவின் கடமைகளை நினைவு கூர்ந்தது.
அமெரிக்கா சமீபத்தில் அனைத்து சர்வதேச சட்டங்களையும், தோஹா, கத்தார், மற்றும் இஸ்லாமிய எமிரேட்டுக்கான அதன் உறுதிப்பாட்டையும் மீறியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க ஆளில்லா விமானங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இந்த மீறல்கள் சரி செய்யப்பட்டு தடுக்கப்பட வேண்டும்.
எந்தவொரு எதிர்மறையான விளைவுகளையும் தடுப்பதற்காக, அனைத்து நாடுகளையும், குறிப்பாக அமெரிக்காவையும், சர்வதேச உறுதிப்பாட்டையும் சட்டங்களையும் பின்பற்றுமாறு நாங்கள் அழைப்பு விடுக்கிறோம் என தலிபான் தெரிவித்துள்ளது.