ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு அடுத்த தடை! தாலிபான்கள் முக்கிய அறிவிப்பு
ஆப்கானிஸ்தானில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் பயணிக்க கூடாது என்று தாலிபான்கள் அதிரடி உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த ஆகஸ்ட்(2021) மாதம் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள், அங்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
ஆரம்பத்தில், நாட்டைக் கைப்பற்றிய போது, ஜனநாயக முறைப்படி தான் ஆட்சி நடக்கும் என்று கூறிய தாலிபான்கள், தற்போது அடுத்தடுத்து சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், தற்போது, ஆப்கானிஸ்தானில் 72 கிலோ மீற்றர்களுக்கு மேல் பயணம் செய்யும் பெண்கள் நெருங்கிய ஆண் உறவினர்களின் துணை இல்லாமல் பயணம் செய்ய அனுமதி கிடையாது.
பயணம் செய்யும் பெண்கள் கண்டிப்பாக ஹைஜாப் அணிய வேண்டும். ஹைஜாப் அணியாத பெண்களை ஓட்டுநர்கள் வாகனங்களில் அனுமதிக்கக்கூடாது. பயணம் செய்யும் அனைவரும் வாகனங்களில் பாடல்கள் கேட்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.