ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் வீரர்களின் பேண்ட் ஊர்வலம்! தலிபான்கள் வெற்றி கொண்டாட்டம்
பாகிஸ்தான் ராணுவ வீரரின் கால்சட்டையை தாலிபான்கள் ஊர்வலமாக எடுத்துச் சென்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வெடித்த இருநாட்டு மோதல்
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் இடையே எல்லையில் வெடித்த மோதல் இருநாடுகளிடையிலான பதற்றத்தை அதிகரித்தது.
இந்நிலையில் பதற்றத்தை தணிக்க இரண்டு நாடுகளும் புதன்கிழமை 48 மணி நேரம் தற்காலிக போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டன.
#Afghan forces have destroyed #Pakistan’s checkpoints along the Durand Line in Spin Boldak, capturing dozens of Pakistani soldiers alive.
— Falcon Defence (@FalconDefence) October 15, 2025
They have also seized a large number of light and heavy weapons, as well as tanks, and transferred them into Afghanistan.
Watch the video for… pic.twitter.com/sOYOCgJFCP
அதே சமயம் இரு நாடுகளும் போர் நிறுத்தத்திற்கான கோரிக்கை வேண்டுதலை மாறி மாறி மற்ற நாட்டின் மீது சுமத்திக் கொண்டன, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், காபூலின் போர் நிறுத்த கோரிக்கையை ஏற்று இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்ததாக அறிவித்தது.
தாலிபான்களின் வெற்றி கொண்டாட்டம்
தற்காலிக போர் நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் வெற்றிக் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தாலிபான்கள், பாகிஸ்தான் வீரர்களின் கால் சட்டைகளை(pants) ஊர்வலமாக ஏந்திச் செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
‘Empty trousers’, recovered from abandoned military posts of Pakistani army near Durand Line displayed in eastern Nangrahar province, Afghanistan. pic.twitter.com/MvjAOsdCgC
— Daud Junbish 🇦🇫 (@DaudJunbish) October 14, 2025
இது பாகிஸ்தானுக்கு மிகப்பெரிய நெருடல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டூரண்ட் கோட்டிற்கு அருகே உள்ள பாகிஸ்தான் ராணுவத்தின் நிலைகளில் இருந்து கைப்பற்ற ராணுவ வீரர்களின் கால் சட்டைகள் ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணப் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டதாக BBC பத்திரிகையாளர் தாவூத் ஜீன்பிஷ் தன்னுடைய X தள பக்கத்தில் புகைப்படத்தை பகிர்ந்து தகவல் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |