திமுக-வின் கலாச்சாரமே பெண்களை இழிவாக பேசுவது தான்: மோடி
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி கலந்துக்கொண்டார்.
தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சபாநாயகர் தனபாலன், தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், வானதி சீனிவாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது - தேசிய ஜனநாயகக் கூட்டணி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது. காங்கிரஸ், தி.மு.க வாரிசு அரசியலை நோக்கமாகக் கொண்டது.
காங்கிரஸ், தி.மு.க ஆகிய கட்சிகள் காலவதியான 2ஜி ஏவுகணையை ஏவி இருக்கிறார்கள். அவர்களுடைய தாக்குதல் என்பது பெண்கள் மீது இருக்கிறது.
நான், அநீதிக்கு எதிராக எந்த சமரசமும் இல்லாத சகோதர, சகோதரிகளின் நிலத்தில் இருக்கிறேன்.
தி.மு.க மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைமைகள் அவர்களுடைய கட்சித் தலைவர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தமிழக பெண்களை அவதூறாக பேசுவதை ஒருபோதும் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.3
ஆ.ராசா, தமிழக முதல்வரின் மரியாதைக்குரிய அம்மாவை குறித்து அவதூறாக பேசியிருக்கிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் திண்டுக்கல் லியோனி பெண்கள் குறித்து அவதூறான கருத்துகளைப் பேசினார். இவர்களை திமுக தலைமைக் கழகம் கண்டிக்கவில்லை.
கடவுளே அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அனைத்து பெண்களையும் அவதூறாக பேசுவார்கள். பெண்களை இழிவாக பேசுவது காங்கிரஸ், தி.மு.கவின் கலாச்சாரமாக இருப்பது வருந்தமளிக்கிறது.
1989-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க தலைவர்கள், ஜெயலலிதாவிடம் நடந்து கொண்டது குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை.
தி.மு.க, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் பெண்கள் முன்னேற்றத்தை உறுதிப்படுத்த முடியாது என்று பேசினார்.
