தமிழக வீரர் நடராஜனுக்கு மூன்று ஓவர்கள் வீச ரூ.10.75 கோடியா! இணையத்தில் வைரல்
டெல்லி அணிக்காக நடப்பு சீஸனில் தங்கராசு நடராஜன் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசியது பேசு பொருளாக மாறியுள்ளது.
தங்கராசு நடராஜன்
நடப்பு ஐபிஎல் தொடரில் சில வீரர்கள் இம்பேக்ட் வீரராக கூட களமிறக்கப்படவில்லை.
அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளரான தங்கராசு நடராஜனும் பல போட்டிகளில் களமிறக்கப்படாமல் இருந்தார்.
எனினும், குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. மூன்று ஓவர்கள் வீசிய அவர் 49 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து விக்கெட் எதையும் வீழ்த்தவில்லை.
ரூ.10.75 கோடி
அதிகபட்ச தொகையான ரூ.10.75 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன் மொத்தமாகவே மூன்று ஓவர்கள் மட்டுமே வீசியுள்ளார்.
இதனை குறிப்பிட்டு, நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் 3 ஓவர்கள் வீச ரூ.10.75 கோடி பெற்ற வீரர் என கிரிக்கெட் ரசிகர்கள் பேசி வருவது அதிக கவனம் பெற்றுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |