பிரதமர் ஆன்டி பர்ன்ஹாம் எலெக்ரிக் காரை பயன்படுத்த வேண்டுமா? கூறப்படும் காரணம்
பிரித்தானியாவில் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் ஆன்டி பர்ன்ஹாமின் முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரசாங்க ஜெட் விமானம்
பிரித்தானியாவின் புதிய பிரதமரான ஆன்டி பர்ன்ஹாம் (Andy Burham), ஐந்து நாட்களுக்குள் பர்ன்ஹாம் மூன்று முறை அரசாங்க ஜெட் விமானத்தைப் பயன்படுத்திய பிறகு, அவரது பயணம் குறித்த கேள்வி ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
அதாவது, அவர் மான்செஸ்டரில் உள்ள தனது புதிய வடக்குத் தளத்திற்கும், வெஸ்ட்மின்ஸ்டருக்கும் இடையில் எப்படி பயணிக்கத் திட்டமிடுகிறார் என்பதும், அதற்கான செலவுகளை யார் ஏற்கிறார்கள் என்பதும் தற்போது பாரிய கேள்விக்குறியாக உள்ளது.
அதேபோல், பர்ன்ஹாம் No 10 நார்த் என்ற புதிய அலுவலகத்தை உருவாக்கும் முடிவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில், இந்த நடவடிக்கைக்கு வரி செலுத்துவோரின் பணம்தான் நிதியளிக்கிறதா என்ற கேள்விகளை இது எழுப்புவதே இதற்கு முக்கியக் காரணம்.
திங்கட்கிழமை, ஆன்டி பர்ன்ஹாம் போர்ட்ஸ்மவுத் கடற்படைத் தளத்தில் உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை சந்திப்பதற்காக 37 நிமிட பயணமாக மீண்டும் வானில் பறந்தார்.
பயண நேரம்
லண்டனில் இருந்து மான்செஸ்டருக்கு இரயிலில் செல்ல சராசரியாக 2 மணிநேரம் 46 நிமிடங்கள் ஆகிறது. இதற்கான கட்டணமும் மிக அதிகமாக உள்ளது.
அதனால், மின்சாரக் காரைப் பயன்படுத்தினால், இதே பயணத்தை பாதிக்கும் குறைவான செலவிலேயே மேற்கொள்ள முடியும் என்று 'Carwow' நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
மேலும், தற்போதைய சூழலில் இருந்து 2029 கோடையில் நடைபெறவுள்ள அடுத்த பொதுத்தேர்தல் வரை, மின்சார வாகனத்தைப் பயன்படுத்துவதன் மூலம் பயண செலவில் 27,000 பவுண்டுகளுக்கும் அதிகமாக பிரதமர் சேமிக்க முடியும் என்று அந்த கார் விற்பனை இணையதளம் கூறுகிறது.
பிரதமர் No 10 நார்த் மற்றும் வெஸ்ட்மின்ஸ்டர் இடையே இரயிலில் பயணம் செய்வதை விட, ஒரு மின்சாரக் காரில் பயணம் செய்வது ஆண்டுக்கு 9,000 பவுண்டுகள் மலிவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |