குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு
குவைத்தில் ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழர் ஒருவர் உயிரிழந்துள்ளர்.
ஈரான் நடத்திய தாக்குதலில் தமிழர் உயிரிழப்பு
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அதற்கு பதிலடியாக மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.
நேற்று மாலை குவைத்தில் உள்ள மின் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்த சந்தன செல்வம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

சந்தன செல்வம் கடந்த 15 ஆண்டுகளாக குவைத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமாகி ஒரு மகள் ஒரு மகன் என 2 குழந்தைகள் உள்ளது.
உயிரிழந்த சந்தன செல்வத்திற்கு குவைத்தில் உள்ள இந்திய தூதரகம் இரங்கல் தெரிவித்துள்ளது.
மேலும், குவைத்திற்கான இந்திய தூதர் பிரமிதா திரிபாதி, உயிரிழந்த சந்தன செல்வத்தின் உடல் கொண்டுவரப்பட்ட குவைத்தின் மத்திய சவக்கிடங்கை பார்வையிட்டார்.
Ambassador @ParamitaTrpathi visited the Central Mortuary of Kuwait today where the mortal remains of the Indian national who lost his life last evening during the attack on a desalination facility, were brought.
— India in Kuwait (@indembkwt) March 30, 2026
Ambassador met Brig. Abdulrahim Al-Awadhi, General Manager of the… pic.twitter.com/Mj4ZYApAi4
உயிரிழந்த இந்தியரின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதுடன், உடலை விரைவாகக் கொண்டு செல்வதற்காக குவைத் அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஈரான் போரில் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக அதிகரித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |