நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நகைச்சுவை நடிகர் மதன் பாப் காலமானார்.
சென்னையில் 1953-ஆம் ஆண்டு பிறந்த நடிகர் மதன் பாபின் இயற்பெயர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி.
தமிழ்த்திரையுலகில் இசையமைப்பாளராக வாழ்க்கையை தொடங்கிய மதன் பாப், 1984-ஆம் ஆண்டு வெளிவந்த ‘நீங்கள் கேட்டவை’ திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானவர்.
ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள அவர், தனது தனித்துவமான சிரிப்பாலும் உடல்மொழியாலும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார்.
தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாமல், தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராகவும், நடுவராகவும் பன்முக திறனை கொண்டவர் மதன் பாப். கடைசியாக அவர் எமன் கட்டளை என்கிற படத்தில் நடித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த மதன் பாப் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், உடல்குறைவால் இன்று (சனிக்கிழமை) மாலை 5 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
மதன் பாபின் உடல் சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |