விவாகரத்தை அறிவித்த பிரபல தமிழ் இயக்குநர்! 17 வருட திருமண வாழ்வில் விடைபெறுவதாக பதிவு
தமிழ் இயக்குநர் சீனு ராமசாமி தனது மனைவியை விவாகரத்து மூலம் பிரிவதாக தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமி
'தென்மேற்கு பருவக்காற்று' படத்தின் மூலம் சிறந்த இயக்குநராக பிரபலமானவர் சீனு ராமசாமி.
அதனைத் தொடர்ந்து நீர்ப்பறவை, தர்மதுரை, கண்ணே கலைமானே உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
இந்நிலையில் இயக்குநர் சீனு ராமசாமி தனது எக்ஸ் பக்கத்தில் மனைவியை விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளார்.
17 வருட திருமண வாழ்க்கை
அவர் தனது பதிவில், "அன்பானவர்களுக்கு வணக்கம். நானும் எனது மனைவி GS தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும், அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன். அவரும் அறிவார்.
இப்பிரிவுக்கு உதவும்படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம். இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும், அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம்; அன்புடன் சீனு ராமசாமி" என கூறியுள்ளார்.
அறிவிப்பு
— Seenu Ramasamy (@seenuramasamy) December 11, 2024
.....................
அன்பானவர்களுக்கு வணக்கம்
நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது…
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |