வெளிநாட்டில் தமிழ் மருத்துவருக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்! வெளியான புகைப்படம்
துபாயில் மருத்துவ குழு சார்பாக தமிழ் மருத்துவரின் சமூக பணிகளை கௌரவித்து அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
துபாய் ரஷிதியா பகுதியில் உள்ள அல்நூர் மருத்துவமனையில் பொது மருத்துவராக தோப்புத்துறை டாக்டர் அக்பர் அலி பணிபுரிந்து வருகிறார்.
இவர் தமிழகத்தின் வேதாரண்யம் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் வேலை செய்து வரும் போது சிறப்பான பணிகளுக்காக தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்தது.
இந்நிலையில் தற்போது துபாயில் தோப்புத்துறை ஜமாஅத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அக்பர் அலியின் மருத்துவத்தை பாராட்டி இளையான்குடி வர்த்தக பிரமுகர் அபுதாஹிர் மற்றும் முதுவை ஹிதாயத் ஆகியோர் அவருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர்.
மேலும் ஜலாலுதீன் ரூமி பாரசீக மொழியில் எழுதி சென்னை பஹீமிய்யா டிரஸ்ட் மூலம் தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட மஸ்னவி ஷரீப் என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது.