தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல்

russia daughter father ukraine phone conversation
By Raju Feb 25, 2022 06:00 AM GMT
Report

உக்ரைன் நாட்டில் தவிக்கும் தமிழகத்தை சேர்ந்த இளம்பெண் தன்னையும் தன்னை சுற்றி உள்ளவர்களையும் காப்பாற்றி அழைத்து செல்லுமாறு கண்ணீருடன் கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரைன் மீது ரஷ்யா போர் தாக்குதல்களை நடத்தும் நிலையில் வேறு நாடுகளை சேர்ந்த பலர் அங்கு சிக்கி கொண்டு நாட்டில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தமிழ்நாட்டில் இருந்து மருத்துவ படிப்புக்காக ஏராளமான மாணவ-மாணவிகள் உக்ரைன் சென்று உள்ளனர். அவர்களில் ஒருவர் ஈரோடு மாவட்டம் தவுட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த மாணவி மவுனி சுகிதா (20). இவர் உக்ரைனில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்.

மவுனி தொலைபேசியில் பேசுகையில், உக்ரைனில் போர் பதற்றம் தொடங்கியது முதல் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பே இந்தியா திரும்ப திட்டமிட்டேன். என்னுடன் தமிழ் மாணவ-மாணவிகள் சுமார் 50 பேரும், இந்திய அளவில் மாணவ-மாணவிகள் 1000 பேரும் இருக்கிறார்கள்.

நாங்கள் ஒரு வாரத்துக்கு முன்பு விமானத்தில் முன்பதிவு செய்தோம். ஆனால் விமானங்கள் ரத்து ஆனதால், நாங்கள் பயணச்சீட்டு வாங்க கொடுத்த பணம் திரும்ப கிடைக்கவே இல்லை. உக்ரைனில் 3 எல்லைகளையும் ராணுவம் அடைத்து விட்டது. நாங்கள் லிவ்விவ் நகரில் இருக்கிறோம்.

தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல் | Tamil Girl From Ukraine Cries Speaks To Father

இங்கிருந்து போலந்து நாடு மிக அருகில் உள்ளது. கார் அல்லது பஸ்சில் கூட சென்று விட முடியும். ஆனால், இங்கு போர் அறிவிப்பு காரணமாக வாடகை கார்கள், பஸ் வசதி, விமான வசதி என்று எதுவும் இல்லை. இதனால் என்ன செய்வது, யாரை தொடர்பு கொண்டு உதவி கேட்பது என்றே தெரியவில்லை.

ஏன் என்றால், இந்திய தூதரகம் எங்களை கண்டுகொள்ளவில்லை. முன்கூட்டியே நாங்கள் விமானத்தில் பயணச்சீட்டு வாங்கியபோது கூட முதலில் இந்திய தூதரகத்தைதான் தொடர்பு கொண்டோம். எப்படியாவது தூதரக அதிகாரிகள், இந்திய மாணவ-மாணவிகள் சொந்த நாட்டுக்கு வந்துவிட உதவி செய்வார்கள் என்று நம்பினோம். ஆனால், எங்கள் தொலைபேசி அழைப்புகளை அவர்கள் எடுக்கவே இல்லை.

இப்போது எங்கள் வங்கி கணக்கில் பணம் இருக்கிறது. ஆனால், உக்ரைன் டாலரில் அதை தர மறுக்கிறார்கள். ஏ.டி.எம். மையங்களுக்கு செல்லலாம் என்று சென்றோம். அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்து இருக்கிறார்கள். நாங்கள் சென்றபோது சுமார் 30 பேர் பணம் எடுத்த நிலையில் ஏ.டி.எம். மையத்தையும் மூடி விட்டார்கள். எங்களிடம் இருக்கும் பணத்தை வைத்து உணவை சேமித்துக்கொள்ளலாம் என்று கடைகளுக்கு சென்றோம்.

தைரியமா இரும்மா! உக்ரைனில் இருக்கும் 20 வயது தமிழ்ப்பெண்ணுடன் பேசிய தந்தை... மனதை கலங்கடிக்கும் உரையாடல் | Tamil Girl From Ukraine Cries Speaks To Father

ஆனால், அங்கும் எதுவும் இல்லை. எதுவும் இல்லை என்றால் அனைத்தையும் மக்கள் வாங்கி விட்டதால் கடைகளே காலியாக உள்ளன. எங்களுக்கு கிடைத்த சில உணவுகளை சேகரித்து வைத்து இருக்கிறோம். இதை வைத்து எங்களால் ஒரு வார காலம் சாப்பிட முடியுமா? என்பது சந்தேகம். என்ன செய்வது என்று தெரியவில்லை.

நேற்று காலையில் கூட விமானங்கள் பறப்பதை பார்த்தோம். அதற்குள் அபாய சங்கு ஒலிக்கப்பட்டு போர் தொடங்கி விட்டார்கள், எங்களை எப்படியாவது மீட்டு செல்லுங்கள் என கூறினார்.

இதனிடையில் மவுனியுடன் அவர் தந்தை நாகராஜன் பேசிய தொலைபேசி உரையாடல் மனதை கலங்கடிப்பதாக உருக்கமாக இருந்தது. நாகராஜன் பேசுகையில், தைரியமா இரும்மா! அமைச்சர் நடவடிக்கை எடுப்பேன் என்று சொல்லியிருக்கிறார். நாளைக்கு முதல்-அமைச்சரை சந்திக்க இருக்கிறேன். போலந்து வழியாக வந்திரலாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதுவரை பாதுகாப்பாக எல்லோரும் ஒன்றாக இருங்கள் என நாகராஜன் பேசியதும், அவரது மகள் மவுனி கண்ணீருடன் சரிப்பா பார்த்துக்கிறேன் என்று கண் கலங்கினார்.


மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
அகாலமரணம்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US