ஐரோப்பிய நாடு ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்ற 19 வயது தமிழன்! குவியும் பாராட்டுக்கள்
அண்டோராவில் நடந்த சர்வதேச செஸ் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இனியன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஐரோப்பிய நாடான அண்டோராவில் 38வது சர்வதேச ஓபன் மற்றும் பிளிட்ஸ் கிராண்ட் பிரிக்ஸ் செஸ் போட்டி நடந்தது.
இந்தப் போட்டியில் தமிழக மாவட்டம் ஈரோட்டைச் சேர்ந்த இனியன், ரத்தனவேல் பங்குபெற்றனர். 19 வயதான இனியன் சிறப்பாக விளையாடி சாம்பியன் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
கடந்த 25ஆம் திகதி பிளிட்ஸில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற இனியன், 31ஆம் திகதி நடந்த கிளாசிக்கல் பிரிவிலும் வெற்றி வாகை சூடினார். கிளாசிக்கலில் மொத்தம் நடந்த 9 சுற்றுகளில் 5யில் வெற்றி பெற்ற அவர், 4 சுற்றுகளை டிரா செய்தார். இதன்மூலம் அவர் 7 புள்ளிகளை பெற்றார்.
Photo: Federació d'Escacs Valls d'Andorra/chessbase
அதேபோல் கிராண்ட் பிரிக்ஸில் நடந்த 9 சுற்றுகளில் 7யில் வெற்றி பெற்று, 2 சுற்றுகளை டிரா செய்தார். இதில் அவர் 8 புள்ளிகளை பெற்றார். மற்றோரு வீரரான ரத்தனவேல் கிளாசிக்கல், கிராண்ட் பிரிக்ஸ் இரண்டு பிரிவிலும் மூன்றாம் இடம்பிடித்தார்.
chessbase
முதலிடம் பிடித்த மாஸ்டர் இனியனுக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்பட்டது. மூன்றாம் இடம்பிடித்த ரத்தனவேலுக்கு பரிசு வழங்கப்பட்டது. வெளிநாட்டில் சாதித்த தமிழக வீரர்களுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
chessbase