ஓமன் கப்பலில் உயிரிழந்த தமிழர்., உடல் குளிர்சாதனமின்றி வைக்கப்பட்டுள்ள சோகம்
ஓமனில் கப்பலில் உயிரிழந்த தமிழரின் உடல் முறையாக பதப்படுத்த முடியாமல் வைக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஓமனின் Duqm துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த MT Celestial என்ற கப்பலில் பணியாற்றிய வஜிஹ்நாட்டைச் சேர்ந்த இரண்டாம் அதிகாரி நிஷாந்த் உயிர்த்தநாதன் (35) உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
அவர் ஜூன் 8-ஆம் திகதி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு, ஜூன் 11-ஆம் திகதி உயிரிழந்ததாக Forward Seamen’s Union of India (FSUI) தெரிவித்துள்ளது.
மருத்துவ உதவி மற்றும் அவசர வெளியேற்றம் செய்ய முயற்சித்தும், தேவையான நடவடிக்கைகள் தாமதமானதால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

உயிரிழந்த பிறகு, அவரது உடல் இரண்டு நாட்கள் கப்பலில் குளிர்சாதன வசதி இல்லாமல் வைக்கப்பட்டதாகவும், குழுவினர் தற்காலிகமாக குளிர்ந்த தண்ணீர் போத்தல்களை பயன்படுத்தி பாதுகாத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
#MTCelestial (off Oman coast)
— FSUI (@FSUIINDIA) June 13, 2026
35-year-old Second Officer Nishanth Uirthanathan (Tamil Nadu) passed away on June 11 after falling seriously ill. His body has remained onboard for over 2 days with no proper refrigeration. Crew is using cold water bottles in a desperate attempt to… pic.twitter.com/hPzGh9St9U
இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் கவனம் பெற்றுள்ளது. இந்திய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சகம் விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
மஸ்கட் இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில், “நிஷாந்த் உயிர்த்தநாதன் மருத்துவ சிக்கலால் உயிரிழந்தார். அவரது உடலை இந்தியாவிற்கு விரைவில் அனுப்ப தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |