இந்தி பிக்பாஸில் வெளியேறிய தமிழ்ப்பட நடிகை ஸ்ருதிகா: அவர் வாங்கிய ஊதியம் எவ்வளவு தெரியுமா?
தமிழ்ப்பட நடிகை ஸ்ருதிகா அர்ஜுன் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்தியில் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸின் 18வது சீசன் நடந்து வருகிறது. இதில் ஸ்ரீ, ஆல்பம், தித்திக்குதே உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஸ்ருதிகா அர்ஜுன் கலந்துகொண்டார்.
திறமையான போட்டியாளராக கடுமையாக போட்டியிட்டதால் ஸ்ருதிகா அர்ஜுனுக்கு பார்வைகள் இடையே ஆதரவு பெருகியது.
இந்த நிலையில் 94 நாட்களுக்கு பின் பிக்பாஸ் வீட்டில் இருந்து ஸ்ருதிகா அர்ஜுன் வெளியேறியுள்ளார்.
அவர் பெற்ற ஊதியம் குறித்த விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. ஸ்ருதிகா அர்ஜுன் வாரத்திற்கு சுமார் 1.5 லட்சம் ஊதியம் பெற்றதாக கூறப்படுகிறது.
அதன்படி 13 வாரங்கள் மற்றும் 3 நாட்கள் அவர் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்காக, தோராயமாக ரூ. 20.14 லட்சம் ஊதியம் பெற்றுள்ளார் என்று தகவல் கூறுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |