அக்டோபர் 13 ஆம் திகதி ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்
tamilnadu cm vijay to visit andhra on october 13: தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், அக்டோபர் 13 ஆம் திகதி ஆந்திராவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திராவிற்கு செல்லும் முதலமைச்சர் விஜய்
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வரும் அக்டோபர் 13 ஆம் தேதி ஆந்திராவிற்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த பயணத்தின் போது ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு மற்றும் துணை முதல்வர் பவன் கல்யாண் ஆகியோரை சந்தித்து நதிநீர் இணைப்பு மற்றும் இரு மாநிலங்களுக்கும் இடையான கிருஷ்ணா நீர் பங்கீடு குறித்து விவாதிக்க உள்ளார்.
தெலுங்கு கங்கை திட்டத்தின்படி, ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி நீரை ஆந்திர அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும்.
ஆனால், இந்த ஆண்டு அக்டோபர் 9 ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீரின் அளவு வெறும் 2.251 டி.எம்.சி. மட்டுமே எனக் கூறப்படுகிறது.
மேலும், விஜயவாடாவில் நடைபெறவுள்ள 'Vijayawada Utsav 2.0' நிகழ்ச்சியில் விஜய் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக காவேரி நீர் விவகாரம் குறித்து கர்நாடகா சென்று அந்த மாநில முதல்வர் டிகே.சிவகுமாரிடம் பேச முதல்வர் விஜய் திட்டமிட்டிருந்தார்.
அப்போது, காவிரியில் தமிழ்நாட்டிற்கு நீர் திறப்பதற்கு எதிராகக் கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்திய சூழலில், அப்போதைக்கு கர்நாடகா வருவதைத் தவிர்க்குமாற டி.கே. சிவக்குமார் கேட்டுக்கொண்டதன் பேரில் முதல்வர் விஜய்யின் கர்நாடகப் பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டது.