Jobs: இன்று முதல் அரசு போக்குவரத்து வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
இந்தியாவில் தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு இன்றைய நாளிலிருந்து விண்ணப்பிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களில் உள்ள மீதியான பணியிடங்களுக்கு தேவையான ஆட்களை நிரப்ப வேண்டும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது.
இதன்படி 685 ஓட்டுநர் உடன் நடத்துநர்கள் நிரப்புவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே இன்று முதல் அந்த வேலைகளுக்கு online மூலம் விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதியம் 1 மணி முதல் அடுத்த மாதம் 18 ஆம் திகதி 1மணி நேரம் வரை www.arasubus.tn.gov.in இந்த தளத்தில் விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இதில் தகுதி பெறுபவர்களுக்கு எழுத்துத் தேர்வு, ஓட்டுநர் உடன் நடத்துநர் திறன் தேர்வு மற்றும் நேர்காணல் என்பவை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |