பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவுக்கு ஊக்கப்பரிசு அறிவிப்பு! எவ்வளவு தெரியுமா?
பாரா ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
பாரா ஒலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதல் T63 பிரிவின் இறுதிச் சுற்றில் 3 இந்திய வீரர்கள் (தங்கவேலு மாரியப்பன், வருண் பட்டி, ஷரத் குமார்) உட்பட 9 வீரர்களில் மோதினர். இதில், அமெரிக்க வீரர் Sam Grewe(T63) 1.88 மீட்டர் உயரம் தாண்டி முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கம் வென்றார்.
அவருக்கு அடுத்தபடியாக தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு(T42) 1.86 மீட்டர் உயரம் தாண்டி இரண்டாவது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கம் வென்றார்.
2016 ரியோவில் நடந்த பாராலிம்பிக்ஸ் உயரம் தாண்டுதலில் மாரியப்பம் தங்கப்பதக்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெள்ளி வென்றுள்ள மாரியப்பனுக்கு பல்வேறு தரப்பில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகிறது.
அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் @189thangavelu-வின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது. அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
— M.K.Stalin (@mkstalin) August 31, 2021
சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! pic.twitter.com/oDREUI9Efa
அந்த வகையில் மாரியப்பனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், சாதனை தமிழனுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்த முதல்வரின் டுவிட்டர் பதிவில், அடுத்தடுத்து 2 பாராலிம்பிக் பதக்கங்களை வென்றுள்ள தமிழ்நாட்டின் தடகளத் தங்கமகன் மாரியப்பனின் சாதனையால் இந்தியாவும் தமிழ்நாடும் பெருமைகொள்கிறது.
அவரது சாதனையைப் பாராட்டித் தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ. 2 கோடி ஊக்கப்பரிசு அளிக்கப்படுகிறது.
சாதனைப்பயணம் தொடர வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.